Sunday, November 27, 2011

பெண்ணே ஏன் மெளனம்...

என் இமைகள்உறங்கியபோதுகூட
என்னுள் இருக்கும்
உன் நினைவுகள் உறங்கவில்லை.......
என்னையே நான்மறந்தபோதுகூட
உன்னை நான் மறக்கவில்லை,
பெண்ணே ஏன் இன்னும் இந்த மெளனம்?
துடிக்கும் என் இதயம் நிற்கும் முன்
என்னிடம் வந்துவிடு பெண்ணே.....!!!
                                     

Monday, October 31, 2011

காதலியே.....

காதலியே சிரிப்பை
சிக்கனப்படுத்தாதே!
உன் இதழ்களால்
சிரிக்கும் போது
நான் இதயத்தால்
சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள்
எனக்கு இறுதி நாளாய்
தெரிகிறது...
அன்றைக்கெல்லாம்
என் இதயம்
உடைந்துபோவதுபோல்
உணர்கிறேன்......!!!

Friday, October 28, 2011

நினைவுகள்...


கண்களால் என் இதயத்தை
களவாடி காதல் விதை விதைத்தவளே...
எப்பொழுதும் உன்னோடுதான்
இருப்பேன் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என் அருகே இருந்தவளே
காலம் மாறினாலும் நம் காதல்
என்றுமே மாறாது என்று சொன்னாயே!
நீ இல்லையென்றால் நான் இல்லை
என்று சொன்னாய் இன்று
அத்தனையும் பொய்யாக்கிவிட்டு
என்னை மறந்து சென்றது ஏனோ?
பெண்ணே என்றாவது ஒரு நாள்
என் மரண செய்திய கேட்டால்
நாம் பழகிய அந்த பழைய
நினைவுகளை நினைத்துப்பார்
அதுவே நீ என் மரணத்திற்கு செய்யும்
அஞ்சலி என் நினைத்துக்கொள்வேன்....!!!!

Wednesday, October 19, 2011

கண்ணீர் சிந்த மாட்டேன்...

என் சிரிப்பு, சந்தோஷத்தில்
அடங்கி இருக்கிறது
என் கஷ்டம், வேதனைகளின் கண்ணீர்
ஆனால் நான் அதற்காக கண்ணீர்
சிந்த மாட்டேன்...
அப்படி சிந்த நான் ஒன்றும்
கோழைய இல்லை
எத்தனை முறை
அடி பட்டாலும்
போராடுவேன் அடித்த
சுவடுகளை என்
ஆயிதமாக கொண்டு
என்றாவது ஒரு
நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்
மட்டுமே மீண்டும்
வெற்றி அடைவேன்
எத்தனை சோகங்களும்
தோல்விகளும் வந்தாலும்
அத்தனையும் தோல்வி அடைய
செய்து வெற்றி பெருவேன்......!!!

Wednesday, October 12, 2011

எதுவும் இல்லாதவன்

என் பெயரை சொல்லி யாரும்
கூப்பிடாதிர்கள்!
நான் யாரும் எதுவும் இல்லாதவனாக
இருக்க ஆசைபடுகிறேன்!
இன்று முதல் எனக்கு பெயர், முகவரி
இல்லை!
நான் ஒரு மனித உருவம்
தன்னந் தனியாயாகவே
என் வாழ்க்கைப்பயணம் எல்லாமே
முடிகின்றன!
என்னுடல் ஒரு பூட்டப்பட்ட அறை
உங்களிடம் சாவிகள்
வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் பூட்டுக்களை மாற்றிக்கொண்டே
இருப்பவன் நான்......!!!

Sunday, September 18, 2011

என்னவளே
உன் முகத்தை.. ஒருமுகமாக்கி..
என் கண்ணில் சிறை வைத்துள்ளேன்.
உன் வாசத்தை சுவாசமாக்கி உயிர் வாழ்கிறேன்.
உன் நினைவுகளை
இதயத்துக்குள் வைத்துபாதுகாக்கிறேன்.
உனக்காக நான் இத்தனை செய்தும்,
என்னை தனியாகவிட்டு செல்கிறாயே பெண்ணே....!!!

Wednesday, September 14, 2011

மலராத காதல்

என் வாழ்க்கை
ஏனோ
சந்தோஷமாக இல்லை
புரிந்து கொள்ளாத
என் அன்பும்
குருட்டுதனமான என் நம்பிகையும்
முட்டாள்தனமென்று
தெரியாமல்
இருந்தேன்
உன் முன்னால்...
உனக்காக கடந்து சென்ற நாட்களும்,
என் நிம்மதி,சந்தோஷம் உனக்காக
அத்தனையும் இழந்தேன்,
இன்றுவரை மலராமல் இருப்பது
என் சந்தோஷம் மட்டுமல்ல …….
அன்று நீ தூக்கி எறிந்த
ரோஜாவும்தான் தான்………….. !!!

Friday, September 9, 2011

காதல்.....

சொன்ன காதல்
என்றாவது
ஒருநாள்
வெல்லும்..!
அனால்,
சொல்லாத காதல்
ஒவ்வொரு நாளும்
‘இதயத்தை’
கொள்ளும்......!!!

உயிரே!

உயிரே!
உன்னைத் தேடியே
தொலைந்து போன
என் இதயத்தை
நீதானே
எடுத்து வைத்திருந்தாய்
எனக்குத் தெரியாமலேயே……

அதிஷ்டம் இல்லாதவன்......

இவ்வுலகில் அதிர்ஷ்டம் இல்லாத முதல் மனிதன்
நான்தான் வலிகளையும் வேதனைகளையும் மட்டுமே
அறிந்தவன் எதுவும் நிலைத்ததில்லை ஏமாற்றத்தை தவிர
என் வாழ்வில் ஏமாற்றம் சகஜம் என்றாலும்
வாழ்வே ஏமாற்றம் என்றால்
மனசு தாங்காத நிஜம் என்னவென்றால்
எல்லா பாசமும் என்னை பாசம் செய்ய
மறக்கிறதா பாசம் இருப்பது போல்
நடிக்கிறதா என்று அறிய முடியாமல்
இருக்கிறேன் உண்மையான அன்பு
கொண்டுள்ள ஒரு அப்பாவி ஜீவன்(கைப்புள்ள)....

Wednesday, August 31, 2011

காதல் என்பது சாக்கடை.....


காதல் என்பது சாக்கடைஎன்ற அப்பாவின் காலில்
அப்படியே விழுந்தேன்
அப்பா நீங்கள் தீர்க்கதரிசி"
என்னடா மகனே புத்தி வந்ததா?"
என்றபடியே தூக்கினார் அப்பா.
இத்தனை நாளாய் 'பன்னி! பன்னி!'
என்று திட்டிய காரணம்
இப்போதுதான் புரிகிறது" என்றேன்.

Tuesday, August 30, 2011

என் காதலி....

தொலைந்துபோன என் காதலியை
தேடிப்பயணிக்கும் நினைவுகளில்
எதிரே பயணத்தில் எதிர்பட்ட
ஒரு பெண்ணின் முகம் உன் முகம்போல்
வந்து போனது....
 
கூரியபார்வையும் குழந்தைபுன்னகையும்
தவிர உனக்கு எனக்கும் எந்த
சம்மந்தமுமில்லை அந்த பயணத்தில்!
இருந்தும் என் தேடல்கள் அந்த பெண்ணை
தாண்டி தொடரமுடியவில்லை
அந்த பெண்ணின் புன்னகையில்
என் மனம் மயங்கி விட்டது...
 
அவளுக்கும் எனக்குமான பூர்வஜென்ம
தொடர்பு உள்ளது போல் இருந்தது
அன்று அவளைபற்றியே சிந்தனையில்
திரும்புகையில் எதிரே என் காதலி வந்தாள்....

Friday, August 26, 2011

கனவுலகம்...

ஒவ்வொரு உயிரினங்களும்
இரண்டு உலகங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கிறது...!
ஒன்று நிஜவுலகம்...!
மற்றயது
கனவுலகம்...!

என் இதயம்.....

என் இதயம் கல் என்று சொன்ன பொழுது
நம்பவில்லையடி அன்று...
நீ பிரிந்த பின் உணர்கிறேன்
உண்மை என்பதை இன்று...
பின் இன்னும் வெடிக்காமல்
துடிக்கிறதே...!!!

Thursday, August 18, 2011

என் இதயத்தைக் கிழிக்கிறாய்???

ஏன் நீ மட்டும் புரியாமல்
என் இதயத்தைக் கிழிக்கிறாய்
ஓ ! என் இதயத்துள் உன்னைத் தேடுகிறாயா?
சரியென்று புன்னகையோடு தலையசைத்துவிடு
சிரித்துக்கொண்டே செத்துப்போய்விடுகிறேன்
ஏனெனில் காதல் என்றோ ஒரு நாள்
என்னையும் கொல்லுமென்று காதல்
வரலாறு சொல்லித்தந்ததால்.......!

பெண்ணே !

பெண்ணே !
தயவுசெய்து என்னை துளியும் வதைக்காதே
உன் கோபதாபங்களை எல்லாம்
என் மீது கொட்டித்தீர்க்காதே
என்னால் எதையுமே தாங்கமுடியாது
தாங்கும் வலிமையும் இல்லை...!!!

எனக்குள்ளே........

எனக்குள்ளே உன்னைப்பற்றி வரைந்த
ஓவியத்தை தினம் தினம்
கனவில் மீட்டி கண்டுகொள்கின்றேன்
நிழல்படம் சிலநொடி நேர்த்தியற்றதாக இருக்கலாம்
நிஜம் நீ என்றென்றும் மாறமாட்டாய்......!!

புலம்பிக்கொண்டிருக்கிறது.....

பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன
பயணச்சீட்டு
வீதியில் கிடந்து
புலம்பிகொண்டிருந்தது
பயணம்முடிந்துவிட்டதை
நினைத்து.........!!

விழிகளுக்கு சோகம்.....

வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....
புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....
அதனால்
இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம்
என் பார்வைகளில்......!!!

Tuesday, August 16, 2011

நீ பொய்யே சொல்லியிருக்கலாம்......

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்.......!!!

கண்ணீர் சிந்த வைக்கிறாய்....

என்னை தினமும்
ஒவ்வொரு துளியாக
கண்ணீர் சிந்த வைக்கிறாய்.
விரைவில்
என்னை பிரித்து
நீ கண்ணீர் ஆற்றில் நனையே
போகுவதை மறந்து......

உன் நினைவுகளை.....

என்னை விட்டுவிடு என்று
நீ சொன்ன அன்றே என்
உயிரை விட்டிருப்பேன்..
ஆனாலும் முயலவில்லையடி..
உன் நினைவுகளை
என் இதயம்
இழக்க‌ இசையாததால்....!!

இதயமே இல்லை....

இதயம் உருகும் வரை உன்னை
காதலித்தமையால்
இன்னொருவளை காதலிக்க
என்னிடம் இதயமே இல்லை....!!!

என் இதயம் உன்னையே காதலிக்கும்.....

ஒவ்வொரு துடிப்புக்கும்
இடையே கிடைக்கும்
மிகச்சிறிய இடைவெளியில்
இதயம் ஓய்வெடுத்துக்கொள்ளும்.
ஆனால்,
அந்த இடைவெளியிலும்
என் இதயம்
உன்னையே காதலிக்கும்.....!!!

மெளன அஞ்சலி....

நீ யாருக்கோ செய்த‌
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது...!

வாழ்ந்துவிட்டு போகிறேனே......

நீ
என்னை
காதலிக்கவில்லை
என்றாலும்
அதை
என்னிடம்
சொல்லாதே....
நீ என்னை
காதலிப்பாய்
என்ற‌
நம்பிக்கையில்
உயிர்
வாழ்ந்துவிட்டு
போகிறேனே......!!!

நானும் இருளானேன்...

என்னிடம் தொலைந்ததை
தேடி கொடுத்தாய்
கடைசியில்
நீயே
என்னை விட்டு
தொலைந்து போனாய்.
நிலவில்லாத வானில்
நானும் இருளானேன்...!!!

Sunday, August 14, 2011

அள்ளிக் கொண்டு போகிறாய் போகும்போது .....

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது....!!!

Friday, August 12, 2011

உன் உயிரில்.....

உன் நிழலில்
என் பாதையென்று
ஊருக்கும் தெரியுமடி.
உன் உயிரில்
என் இதயமென்று
உனக்கும் தெரியுமடி.....!!!

தனிமையில் நான்......

அன்று
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒருவரின் பாத சுவடுதான்!
மாலை வெயிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!
இன்றும்
ஒருவரின் சுவடுதான்!
ஒரே நிழல்தான்!
ஆனால் தனிமையில் நான்........!!!

என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்.....

காதல் விதையாய் வந்த நீ
என் இதயத் துடிப்போடு சேர்ந்து வளர்கிறாய்
என்னுள் இதயத் துடிப்பு இருக்கும் வரை
என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்.....!!

மரணம் கூப்பிடுவதாய் உணர்கிறேன்.....

நீ திட்டினால் நான் கோபப்படுவதில்லை...
நீ அடித்தால் நான் அழுவதில்லை....
ஆனால் மெளனமாக மட்டும் இருந்து விடாதே என்னை மரணம் கூப்பிடுவதாய் உணர்கிறேன்.....!!!

சொல்லித் தெரிவதில்லை காதல்........

சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்.........!!!!

என் இதயம்.....

பூப்போன்ற
உன் இதழ்களைப்
பார்க்கும்போதெல்லாம்
வண்ணத்துப்பூச்சியாகிவிடத்
துடிக்கிறது
என் இதயம்............!!

முகம் பார்க்கும் கண்ணாடி நீ.....

பெண்ணே... நான் கோபத்தைக்கூட அன்பாய்க் காட்ட காரணம்...
நான் முகம் பார்க்கும் கண்ணாடி... நீ! உன்னை உடைத்தால் என் முகம் அல்லவா உடைந்து உடைந்து தெரியும்.....!!!

என் நரகமும் நீயே.........

இதுவரை நினைத்திருந்தேன்,
நீ மட்டுமே......
என் சொர்க்கம் என்று..
இப்பொழுதுதான்
உணருகிறேன்
என் நரகமும் நீயே என்று.....!!!

உன் அன்பை அழகாக வெளிபடுத்துகிறாய்......

அன்பை வெளிபடுத்த
துன்பத்தைத் தவிர
வேறு நல்லசந்தர்ப்பம் இல்லை.
உன் அன்பை அழகாக
வெளிபடுத்துகிறாய்!
எனது மனக்கவலையில்......!!!

நீ எங்கே சிறை வைக்கப் போகிறாய்??

இரும்புக் கதவுடைத்து
திருடியவன் இரும்பு கம்பிகளுக்கு
பின்னால் சிறை வைக்கப்பட்டான்,
மனக் கதவை உடைத்து
உன் இதயத்தை கொள்ளை
அடித்தவனை நீ எங்கே சிறை
வைக்கப் போகிறாய்???

Tuesday, August 9, 2011

நீ போகும்போது....

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

உன் அழகை.......

உன் மேக்கப்
எல்லாம்
கலைத்து விட்டாலும்
உன் அழகைக்
கொஞ்சம் கூடக்
குறைத்துவிடுவதில்லை
மழை....!!!

உன் கண்களோடு.....

பேசுகின்ற
உன்கண்களோடு
பேசுகையில்
நான்
பறந்துகொண்டிருக்கிறேன்
அழுகின்ற
உன் கண்களோடு
பேசுகையில்
நான்
இறந்துகொண்டிருக்கிறேன்....!!!!!

எல்லோருக்கும் தெரிந்தபின்பே எனக்குத் தெரிந்தது....

நான்
உனக்கு அளித்த சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.....!!!

நானும் கழுதைதான்....

உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான்.......!!!!

என்னை மறந்துவிடு......

நான் என்ன சொன்னாலும்
நீ கேட்ப்பாய் என்று தெரியும்
ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது,
ஏதோ கோபத்தில் என்னை
மறந்துவிடு என்று சொன்னால்,
இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!

உயிர்பெறாத நம் காதல்...

என் அன்பை உன் இதயத்தில் அல்லவா விதைத்தேன் உலரவிட்டு விட்டாயே இதோ பார் என் மனதில் நீ பூத்துக் குலுங்குவதையும் புன்னகை புரிவதையும் கண்ணீர் விடுவதையும் கருவரையிலே அது உறங்கப்போவதையும உன்னால் உயிர்பெறாத நம் காதல்....!!!

நீ என்னை அழைத்திடவில்லை....

உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதிடவில்லை!
உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை.......!!!!

நீயே அறிமுகப்படுத்திவிட்டாயே!

நீ எனக்கு அறிமுகப்படுத்திய
காதலை, உனக்கு அறிமுகப்படுத்துவதற்காக
இதயத்தை அடகு வைத்து வாங்கிய ரோஜாவுடன்
வந்தேன்!,
அதற்குள் நீயே அறிமுகப்படுத்திவிட்டாயே!
உன் காதலனை....!!!

என் காதலின் சின்னமாக….

அன்பே எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில் அமர்ந்து அழு….
உன்னால் நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில் முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
என் காதலின் சின்னமாக….!!!

என் அன்புத் தோழி...

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

குழம்பிப் போனேன்.....

நீ பேசாமல் போனாய் புரிந்துகொண்டேன் பேசிவிட்டுப் போனாய் குழம்பிப் போனேன் எல்லோருக்கும் பேசுவதற்கு ஒரு மொழி தேவைப்படும் உனக்கு மட்டும் பேசாமல் இருப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது...