Saturday, August 6, 2011

உனக்குத் தெரியாமல்.....

என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...

ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை.....!!!

No comments:

Post a Comment